
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், 33 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். முன்னதாக இவர்களில் 17 பேர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு மொத்தமாக ரூ.49 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மனிதாபிமானமற்ற, வெறுமையான சித்தாந்தம் மற்றும் உள்ளூர் பழங்குடியினர் மீதான அட்டூழியங்கள் ஆகியவை காரணமாக நக்சல் அமைப்பை விட்டு வெளியேற முடிவு செய்ததாக சரணடந்தவர்கள் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில அரசு, நக்சல் சரணடைதல்/பாதிக்கப்பட்டோர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கொள்கை 2025-ன் கீழ், 'எல்வாட் பஞ்சாயத்து யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, நக்சல்களை சரணடைய வைத்து, தங்களை நக்சல் இல்லாதவர்களாக அறிவிக்கும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை அனுமதிப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.