பால்வளத்துறை உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 621 பேர் தேர்வு; பணிநியமன ஆணைகள் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 days ago 5

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 621 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணைகள் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.4.2025) தலைமைச் செயலகத்தில், பால்வளத்துறை சார்பில் 64 நபர்களுக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 166 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 391 நபர்களுக்கும், என மொத்தம் 621 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 13 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 40,000 பணியிடங்கள் நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ளும் என்ற அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் 621 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் வே. அமுதவல்லி, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் மருத்துவர் ந.சுப்பையன், இ.ஆ.ப., பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் / ஆவின் நிர்வாக இயக்குநர் .அண்ணாதுரை, இ.ஆ.ப., கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Read Entire Article