
சென்னை,
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தா திருமண விழாவுக்கு பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவிமோகன் வந்திருந்தார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. சினிமா துறையிலிருந்து பலரும் இந்த திருமணத்தில் இன்று பங்கேற்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, சத்யராஜ், நிழல்கள் ரவி, இயக்குனர்கள் மணி ரத்னம், ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பி.வாசு, நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், நடிகர் ரவிமோகனும் இந்த திருமண விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவருடன் பாடகி கெனிஷாவும் வந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.