மனதை மாற்றிய ஜெய்ஸ்வால்.. மீண்டும் மும்பை அணியில் விளையாட முடிவு

7 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஞ்சி, விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். மும்பை அணியின் நட்சத்திரமாக அறியப்பட்ட 23 வயதான ஜெய்ஸ்வால் திடீரென மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதற்கு முடிவு எடுத்து, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் அனுமதி கேட்டார். அவர்களும் அவர் கோவா அணியில் ஆடுவதற்கு ஒப்புக் கொண்டனர்.

இவர் விலகுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மும்பை அணியின் மூத்த வீரரான ரகானேவுடன் ஏற்பட்ட மோதல்தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகின. அத்துடன் கோவா அணி அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியதாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த முடிவை மாற்றிய ஜெய்ஸ்வால் மீண்டும் மும்பை அணியில் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் மும்பை கிரிக்கெட் சங்கம் வழங்கிய தடையில்லா சான்றிதழை திரும்ப பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ. மற்றும் கோவா கிரிக்கெட் சங்கத்துடன் கலந்தாலோசித்து இது குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article