சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் வரும் 18ம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மகளிர் அணிச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வளர்மதி தலைமையிலும் மாணவர் அணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
The post பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி சென்னையில் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு appeared first on Dinakaran.