பஹ்ரைச்: உத்தரப்பிரதேசத்தின் விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது வாலிபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நபரை பிடித்த கிராம மக்கள் அவரை நிர்வாணப்படுத்தி மாட்டுவண்டியில் கட்டினார்கள். பின்னர் ஊர்வலமாக அவரை இழுத்துசென்றனர். அப்போது பலரும் அவரை கடுமையாக தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பாதிக்கப்பட்ட நபரின் உறவினரான பெண் ஒருவர், நேற்று முன்தினம் போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். புகாரில், தனது மைத்துனர் கடந்த 3ம் தேதி கயிற்றால் கட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் என்று போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post பாலியல் வன்கொடுமை வழக்கு வாலிபரை நிர்வாணப்படுத்தி மாட்டுவண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரம் appeared first on Dinakaran.