பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

3 months ago 18

 

திருப்பூர், அக்.8: திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை தாங்கினார். பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை தடுத்து நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் இஸ்ரேல் உலக நாடுகளில் மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் போரை விரிவுப்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது.

அப்பாவி மக்களை போரின் பெயரால் படுகொலை செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், இசாக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article