பாலக்கோடு, பிப்.14: பாலக்கோட்டில், புதூர்மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 12 கிராம காளைகள் சீறிப்பாய்ந்தன. தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில், புதூர்மாரியம்மன் கோயிலில், மாசி மாத திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. இதில் 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து, ஊருக்கு ஒரு காளைகள் வீதம் 12 காளைகள் பங்கேற்றன. காளைகளுக்கு பூஜை செய்து, ஊர்கவுண்டர் காளை முதலில் ஓட விடப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள், கோயிலை சுற்றி ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டது. இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்ற காளைகளை கண்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
The post பாலக்கோட்டில் எருது விடும் விழா கோலாகலம் சீறிப்பாய்ந்த காளைகள் appeared first on Dinakaran.