தர்மபுரி, பிப்.7: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா மற்றும் நகரத்தில் புதூர் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, வரும் 12ம்தேதி (புதன்கிழமை) பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும், உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் 22ம்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று, பாலக்கோடு சார்நிலை கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post பாலக்கோட்டில் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.