கரூர் மாரியம்மன் கோயி்ல் விழா; மே 28ம் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

2 days ago 3

கரூர், மே 12: கரூரில் மாரியம்மன்கோயில் திருவிழாவை யொட்டி வருகிற மே 28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மே 28ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் கரூர் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா மே 11ம்தேதி முதல் ஜூன் 8ம்தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 28ம்தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே, இந்த நிகழ்வு நடைபெறவுள்ள மே 28ம்தேதி புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாளான மே 28ம் தேதி ஆனது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 14ம்தேதி (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாரியம்மன் கோயி்ல் விழா; மே 28ம் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article