திருச்சி, பிப்.15:திருச்சியில் இருந்து புறப்படும் பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கரூர் வீரராக்கியத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் கரூர்-வீரராக்கியம் இடையிலான ரயில்வே பாலத்தில் பொறியியல் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி ரயில்வே ஜங்சனில் இருந்து இன்று (பிப்.15) மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16843 திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயிலானது, வீரராக்கியத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும், வீரராக்கியத்தில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இந்த ரயில் செல்லும். அவ்வாறு செல்லும் ரயில் வழக்கமாக நிறுத்தப்படும் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பாலக்காடு டவுன்எக்ஸ்பிரஸ் ரயில் வீரராக்கியத்தில் நின்று செல்லும் appeared first on Dinakaran.