பார்டர்-கவாஸ்கர் டிராபி; கில்-ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும் - பாக். முன்னாள் வீரர்

2 months ago 12

கராச்சி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய டாப் ஆர்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியதன் அவசியம் மற்றும் பேட்டிங் வரிசையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரோகித் சர்மா தற்பொழுது தொடக்க ஆட்டக்காரராக இன்றும் வசதியாக இருக்கிறாரா? இல்லை அவரை ஒரு இடம் கீழே இறக்கி மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டுமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அவர் தற்போது இந்திய விக்கெட்டுகளில் போராடி வருகிறார். நியூசிலாந்தின் டிம் சவுதி, ரோகித்தை இரண்டு முறை வெளியேற்றி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் பந்து அதிகம் நகரும்.

எனவே இந்திய அணி நிர்வாகம் இது குறித்து யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலிய தொடரில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இருக்க வேண்டும். அடுத்தடுத்த இடங்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட வேண்டும். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கின்ற காரணத்தினால், இந்திய பேட்டிங் வரிசையை பயிற்சியாளர் கம்பீர் நிர்வகிக்க வேண்டும். இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய பேட்ஸ்மேன் சிறப்பாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக இந்திய டாப் ஆர்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். இந்த இடத்தில் தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தடுமாறுவது பிரச்சினையாக இருக்கிறது. எனவே இவர்கள் சிறப்பாக ஆடினால் இந்திய அணியும் நல்ல நிலையில் இருக்கும். மேலும் கீழ் வரிசையில் வருகின்ற சர்பராஸ் கான் போன்றவர்களுக்கும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article