பாரதியார் பல்கலைக்கழக விடுதி குறைபாடு உடனே சரிசெய்யப்படும்

4 months ago 16

 

கோவை, அக். 16: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, முனைவர் பட்டம் பெற்ற மாணவன் ஒருவர் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் முறையாக பராமரிப்பது இல்லை உள்ளிட்ட புகாரை தமிழ்நாடு கவர்னரிடம் மேடையில் மனுவாக அளித்தார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், புகார் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விடுதி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், உயர்கல்வித்துறை செயலரும் விடுதி குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலர் உத்தரவின் பேரில், பல்கலைக்கழக விடுதிகளில் உள்ள குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) தெரிவித்துள்ளார்.

The post பாரதியார் பல்கலைக்கழக விடுதி குறைபாடு உடனே சரிசெய்யப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article