சென்னை: பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு வினாடிக்கு 42 கனஅடி தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-2025-ஆம் ஆண்டு நீர் இருப்பை கணக்கில் கொண்டு 20.03.2025 முதல் 120 நாட்களுக்கு ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு வினாடிக்கு 42.00 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் 12 கிராமங்கள் மூலம் 2501 ஏக்கரும் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் 4 கிராமங்கள் மூலம் 1499 ஏக்கரும் மொத்தம் 16 கிராமங்கள் மூலம் 4000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
The post பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!! appeared first on Dinakaran.