பாம்பன், மண்டபம்: 4 நிவாரண முகாம்கள் அமைப்பு

2 months ago 13

ராமநாதபுரம்: பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் மொத்தம் 4 நிவாரண முகாம்களில் 190 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 11 மருத்துவக் குழுக்கள் அமைத்து, இன்று 52 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 789 பேர் பயனடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மீட்பு, நிவாரண பணி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி வள்ளலார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மண்டல அளவிலான மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post பாம்பன், மண்டபம்: 4 நிவாரண முகாம்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article