மகிந்திரா நிறுவனம், வீரோ சிஎன்ஜி என்ற வணிக பயன்பாட்டு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில், 1.4 எக்ஸ்எக்ஸ்எல் எஸ்டி வி2 சிஎன்ஜி மற்றும் 1.4 எக்ஸ்எக்ஸ்டி எஸ்டி வி4 சிஎன்ஜி என்ற இரண்டு டிரிம்கள் உள்ளன. அதிகபட்சமாக 89.84 எச்பி பவரையும், 210 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 19.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. 4.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும் இடம் பெற்றுள்ளது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 480 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். 1.4 டன் சுமையை இழுத்துச் செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை டிரைவர் பகுதியில் ஏர்பேக் உட்பட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஏஐஎஸ்096 பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலையாக 1.4 எக்ஸ்எக்ஸ்எல் எஸ்டி வி2 சிஎன்ஜி சுமார் ₹8.99 லட்சம் எனவும், 1.4 எக்ஸ்எக்ஸ்டி எஸ்டி வி4 சிஎன்ஜி சுமார் ₹9.39 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post மகிந்திரா வீரோ சிஎன்ஜி appeared first on Dinakaran.