பாம்பன் புதிய பாலம் திறப்புவிழா எப்போது..? இறுதிக்கட்ட ஆய்வுக்கு ரயில்வே அதிகாரிகள் தயார்

3 months ago 20

ராமேஸ்வரம்: ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக்குப் பின் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு குறித்த உறுதியான அறிவிப்பு வெளியாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாக் ஜலசந்தி கடலில் ரூ.550 கோடி செலவில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தியாவின் முதல் வெர்டிகிள் தூக்குப்பாலமான இதில் நடந்து வரும் சோதனைகளும் சில தினங்களில் நிறைவடைகிறது. பொறியியல், எலெக்ட்ரிக்கல், சிக்னல், சென்சார் சிஸ்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சோதனையின் போது கண்டறியப்பட்ட திருத்தங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மாதத்தில் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம்

ஆய்வுக்குப் பின் புதிய பாலம் திறப்பு குறித்த உறுதியான அறிவிப்பு வெளியாகும்‌ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் திறப்பு விழா அறிவிப்புக்காக, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் புதிய ரயில் பாலத்தை இறுதிக்கட்ட ஆய்வு செய்ய தயாராகி வருகின்றனர்.

The post பாம்பன் புதிய பாலம் திறப்புவிழா எப்போது..? இறுதிக்கட்ட ஆய்வுக்கு ரயில்வே அதிகாரிகள் தயார் appeared first on Dinakaran.

Read Entire Article