பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சேதமான பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு

2 months ago 8

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.3: பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், மழையால் சேதமான பயிர்களை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், மழையினால் சேதமான பயிர்களை, வேளாண்மை இணை இயக்குனர் மரியரவி ஜெயக்குமார் மற்றும் துணை இயக்குனர் குணசேகரன் (மத்திய திட்டம்) ஆகியோர் கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் முதிர்ச்சி அடைந்த பயிர்களையும், புதிதாக நடவு செய்த நெல் வயல்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் மூலம், வேளாண் பயிர்களுக்கு மாவட்டம் முழுவதும் கணக்கீடு செய்யப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின் போது, பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அருணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், சக்தி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சேதமான பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article