சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் ஸ்மார்ட் காவலர் செயலி நாட்டிலேயே சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய குற்ற ஆவண காப்பக (என்சிஆர்பி) டிராபி வழங்கப்பட்டது. ஸ்மார்ட் காவலர் செயலி என்பது டிஜிட்டல் தொழில்நுட்பந்தின் மூலம் காவல்பணியை மேம்படுத்த தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட மின்னணு ரோந்து அமைப்பாகும். அதன் முதன்மை நோக்கம் பீட் ரோந்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது, கண்காணிப்பது.
இச்செயலி, நிகழ்நேர அவசர பதில், குற்ற அறிக்கை மற்றும் சமூக ஈடுபாடு மற்றும் பீட் கண்காணிப்புப்பணி ஒதுக்கீடு மற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு பணி மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் திறமையான வெளிப்படையான தொழில்நுட்பம் சார்ந்த காவல் முறையை உறுதிசெய்கிறது. இப் பயன்பாடு இணையம் மற்றும் கைபேசி தளங்களில் கிடைக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 68வது அகில இந்திய காவல்துறைக் கடமை கூட்டத்தில் கணினி விழிப்புணர்வு போட்டியில், தமிழ்நாடு காவல்துறையின் ஸ்மார்ட் காவலர் செயலி நாட்டிலேயே சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துடன் காவல்துறைக்கு அதிகாரம் அளிப்பதற்காக தேசியக் குற்ற ஆவணக் காப்பக (என்சிஆர்பி) ரன்னிங் டிராபியும் வழங்கப்பட்டது.
The post தமிழ்நாடு காவல்துறையின் ஸ்மார்ட் காவலர் செயலி நாட்டிலேயே சிறந்ததாக தேர்வு appeared first on Dinakaran.