பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

1 month ago 7

கும்பகோணம், டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அனைவரையும் திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட ராக்கி என்ற மோப்பநாய் உதவியுடன் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து கும்பகோணம் வழியாக கடந்து சென்ற பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ரயில்களிலும் போலீசார் சோதனை நடத்தி, பயணிகள் கொண்டு செல்லும் உடமைகளையும் பரிசோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி கும்பகோணம் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ செந்தில்வேலன், எஸ்எஸ்ஐக்கள் குமார், ஜெகதீசன், மீனாட்சி, தலைமை காவலர்கள் ராஜசேகர், கவிதா ருக்குமணி, தலைமை காவலர் தனிப்பிரிவு ஐயப்பன் மற்றும் ரயில்வே பாதுகாப்புபடை போலீஸ் இளையராஜா உள்ளிட்டோர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

The post பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article