சசிகுமாரின் "பிரீடம்" ரிலீஸ் தேதி அறிவிப்பு

11 hours ago 2

சென்னை,

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'ப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

விஜய கணபதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வது போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இயக்குநரான சசிகுமார் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கருடன் ஹிட் அடித்தது. இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால், அப்போது தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது. பிரீடம் படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் 'பிரீடம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் 'பிரீடம்' திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Buckle up for an intense Action drama filled with strong emotions ♥️@SasikumarDir's sir ♥️♥️♥️#Freedom hitting the theatres from 10th July 2025.#FreedomFromJuly10Directed by @Sathyasivadir Produced by @vijayganapathys @PandiyanParasu Music by @GhibranVaibodhapic.twitter.com/m5b3t9S64O

— Pandiyan Parasuraman (@PandiyanParasu) May 9, 2025
Read Entire Article