சித்திரைத் திருவிழா: தாம்பரம் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

10 hours ago 1

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி தாம்பரத்தில் இருந்து நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக மே 12-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது.

Read Entire Article