சென்னை: பாஜகவுடன் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம் என தமிழக வெற்றி கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணியாற்றி வாருகிறார். தனது கடைசி திரைப்படமான ஜனநாயகம் படத்திற்கு பிறகு முழு அரசியலில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வருகிற 2026ம் ஆண்டு தவெக ஆட்சியை அமைக்கும் என கூறிய விஜய், அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக-தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக முன்னதாக கூறப்பட்டது. இதனிடையே அதிமுக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம் என தமிழக வெற்றி கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்த முடிவுகளை உரிய நேரத்தில் எங்கள் கட்சித் தலைவர் எடுப்பார் எனவும், தமிழக வெற்றி கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
The post பாஜகவுடன் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம் appeared first on Dinakaran.