தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி இழப்பீடு: பாகிஸ்தான் அரசு வழங்குகிறது

6 hours ago 3

இஸ்லாமாபாத்: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு படையினர் கடந்த 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தினர். துல்லியமான வான் வழி தாக்குதலில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது. அங்கு தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.

இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன்படி, 14 பேரை இழந்த மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டி தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் நம் நாடு நடத்திய துல்லியமான தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. 80க்கும் அதிகமான பயங்கரவாதிகள் மட்டுமே இறந்தனர்.

அப்பாவி மக்கள் யாரும் சாகவில்லை. இப்படியான சூழலில் பயங்கரவாதிகளை பொதுமக்கள் என்று கூறி பாகிஸ்தான் கட்டுமான பணிகளை செய்து தருவதாக கூறியுள்ளது. அதன்படி பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட 9 பயங்கரவாதிகளின் முகாம்களும் மீண்டும் கட்டப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் நாட்டுக்கும் பிரச்னையாக மாறலாம். ஏனென்றால் மீண்டும் அங்கு பயங்கரவாதிகள் முகாம்களாக பயன்படுத்தலாம் என்பதால் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை நம் நாடு உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.

The post தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி இழப்பீடு: பாகிஸ்தான் அரசு வழங்குகிறது appeared first on Dinakaran.

Read Entire Article