நாகர்கோவில்: நாகர்கோவில் புறநகர் பகுதிகளில் உள்ள பழைய குக்கிராமங்களில் ஏராளமான சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன. வயல்கள் நடுவே அமைந்துள்ள இந்த கோயில்கள் அந்த ஊருக்கே அழகும், பழையான வரலாற்றையும் கொண்டுள்ள கற்கோயில்கள் ஆகும். இதில் பல கோயில்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இந்த கோயில்களை சிவன் பக்தர்களும், பெருமாள் பக்தர்களும் உழவாரப்பணி மேற்கொண்டு பூஜைகள் செய்து வருகின்றனர். அதேபோல் நாகர்கோவிலை அடுத்த புரவசேரியில், சிவன் கோயில் ஊர் நுழைவு பகுதியிலும், அதன் பின் புறம் பெருமாள் கோயிலும், ஆற்றங்கரையில் கிருஷ்ணன் கோயிலும் அமைந்துள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயில்களில் பெருமாள் கோயிலில் தற்போது கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் சிவன் கோயில் பகுதியை ஆக்கர் கடை குடோனாக மாற்ற முயலும் சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோயிலின் காம்பவுண்ட் சுவரை சுற்றி காலி அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர கோயிலின் பின்புற கதவும் உடைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக கோயிலின் உள்ளே சென்று தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதாகவும் புகார் உள்ளது. மேலும், கோயிலின் எதிர்புறம் உள்ள கோயில் குளத்தின் படிக்கட்டுகள் சிவப்பு நிற கற்கனால் ஆனவை.
தற்போது அந்த குளமும் அதனை சுற்றியுள்ள வயல்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டதால், போதிய பராமரிப்பின்றி பாழடையும் நில ஏற்பட்டுள்ளது. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் ேகாயிலை சுற்றி போடப்பட்டுள்ள அட்டை பெட்டிகள் போன்ற பொருட்களை மாற்ற நடவடிக்கை மேற்கொள்வதுடன், கோயிலின் பின்புற கதவையும் சரி செய்து திருட்டு சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கோயில் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உடைந்து போன கதவுகள்; புரவசேரி சிவன் கோயில் பாதுகாக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.