பாஜக வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா?: கெஜ்ரிவால் கேள்வி

4 months ago 10

புதுடெல்லி,

டெல்லியில் 70 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், வாக்காளர்கள் பட்டியலில் பாஜக முறைகேடு செய்வதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? தலித்துகள் மற்றும் பூர்வகுடிகள் வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்துக்கு சரியானது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? பாஜக ஐனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Entire Article