பாஜ ஆளும் மாநிலங்களில்தான் போதை பொருள் நடமாட்டம் அதிகம்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

1 week ago 3

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று அளித்த பேட்டி: உள்துறை அமைச்சர் அமித்ஷா போதை பொருள் பற்றி பேசுகிறார். நாடு முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட போதை பொருட்கள் மதிப்பு 11,311 கோடி ரூபாய். குஜராத்தில் மட்டும் ரூ. 7350 கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.2118 கோடி போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து போதைப் பொருள் நடமாட்டம் எங்கு இருக்கிறது, போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக ராஜஸ்தானில் இருக்கிறது.

தமிழ்நாட்டின் நலனுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக -பாஜக கூட்டணி விரைவில் முடிவாகும் என்று கூறியுள்ளார். இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்பது விரைவில் தெரியும். மதுபான விவகாரத்தில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி 10, 15 நாட்கள் ஆகிறது. இதுவரை எந்தவிதமான அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அறிக்கை இனிமேல் பொய்யாக தயாரித்து தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ ஆளும் மாநிலங்களில்தான் போதை பொருள் நடமாட்டம் அதிகம்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article