பாசில் ஜோசப்பின் "மரணமாஸ்" படத்தின் பாடல் புரோமோ வெளியீடு

3 days ago 2

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் 'கோதா', 'மின்னள் முரளி' படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராகவும் முன்னேறியுள்ளார்.இவர் நடிப்பில் வெளியான சூக்ஷமதர்ஷினி, பொன்மேன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவர் தற்போது 'மரணமாஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஒரு வித்தியாசமான பன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தை சிவபிரசாத் இயக்கியுள்ளார். இதன் கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார். இந்தப் படத்தை டோவினோ தாமஸ், ரபியல் பிலிம் புரடக்ஷன்ஸ், வோல்ர்டு வைட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மரணமாஸ்' எனும் பாடலை மனு மஞ்சித் எழுதியுள்ளார். எலக்ட்ரானிக் கிளி என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது.

Basil Joseph's #Maranamass Promo Song is Out Nowhttps://t.co/tx6gm59HbqFilm in theatres from Apr 10th !! pic.twitter.com/JZ1KR1VC3b

— AmuthaBharathi (@CinemaWithAB) March 28, 2025
Read Entire Article