
ஐதராபாத்,
ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா இருவரும் தலா 41 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்தது.
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக தற்போது மைதானத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆட்டத்தில் இரண்டாம் பாதி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பின் போட்டி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டால், ஐதராபாத் அணிக்கு ஓவர்களை குறைத்து வெற்றி இலக்கு அறிவிக்கப்படும். மழை விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.