ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் படத்தின் பர்ஸ்ட் லுக் - வைரல்

8 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'கிங்ஸ்டன்' படம் வெளியானது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து 'இடிமுழக்கம்' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு 'இம்மோர்டல்' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

Here is the first look of my next #Immortal @11Lohar … a thriller film @DirMari_Chinna @AKfilmfactory @SamCSmusic @gopiprasannaa pic.twitter.com/bY7pdd1uep

— G.V.Prakash Kumar (@gvprakash) May 9, 2025
Read Entire Article