பாக். ஏவுகணை, டிரோன் பாகங்கள் ராஜஸ்தான், பஞ்சாபில் கண்டெடுப்பு

19 hours ago 2

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் கிஷாங்காட் பகுதியில் நேற்று காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கோட்வாலி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கிஷாங்காட்டின் முன்னுள்ள ஜோகிஸ் காலணியில் நர்சரி பள்ளி அருகே இந்த பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த வெடிகுண்டு போன்ற பொருள் நேற்று முன்தினம் இரவு ஜெய்சல்மார் மீது பாகிஸ்தான் ஏவிய பாகிஸ்தானின் டிரோன்களை ஒத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள ஒரு கிராமத்தின் வயல்வௌிகளில் ஏவுகணையின் பாகங்களை போன்ற உலோக குப்பைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் விமானப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற விமானப்படையினர் அந்த பொருளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பதிந்தா கிராமத்தில் துங்வாலி கிராமத்தின் ஒரு வயல்வௌியில் அடையாளம் தெரியாத பொருளின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 

The post பாக். ஏவுகணை, டிரோன் பாகங்கள் ராஜஸ்தான், பஞ்சாபில் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article