பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும்: தலைமை ஆலோசகர் யூனுஸின் உதவியாளர் பரிந்துரை

13 hours ago 3

டாக்கா: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த சூழலில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உதவியாளர் பஸ்லுர் ரஹ்மான் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானை இந்தியா தாக்கும் நேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், வங்கதேசம் வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும். இது தொடர்பாக கூட்டு ராணுவ ஏற்பாடு குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடங்குவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்த பதற்றங்களை தணிக்க இந்தியாவை வற்புறுத்துமாறு சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளை பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தினார். இதற்காக இஸ்லாமாபாத்தில் சவுதி தூதர் நவாப் பின் சயீத் அல்-மாலிகி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் ஹமத் ஒபைத் அல்-ஜாபி, குவைத் தூதர் நாசர் அப்துல்ரஹ்மான் ஜாசர் ஆகியோரை ஷெரீப் தனித்தனியாக சந்தித்து பேசினார்.

* தீவிரவாதிகளை பாக். வேட்டையாடும்: அமெரிக்க துணை அதிபர் நம்பிக்கை
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறுகையில்,’ பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பரந்த பிராந்திய மோதலுக்கு வழிவகுக்காத வகையில் பதிலளிக்க வேண்டும். பாகிஸ்தான், தங்கள் பிரதேசத்தில் செயல்படும் தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவதை உறுதிசெய்ய இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது இப்படித்தான் வெளிப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதொடர்பாக பாக்குடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்று வான்ஸ் கூறினார்.

The post பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும்: தலைமை ஆலோசகர் யூனுஸின் உதவியாளர் பரிந்துரை appeared first on Dinakaran.

Read Entire Article