பாகிஸ்தானுடன் முதல் ஒருநாள்; 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

2 weeks ago 3


* ஸ்டார்க் ஆட்ட நாயகன்

மெல்போர்ன்: பாகிஸ்தான் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சைம் அயூப் 1, அப்துல்லா ஷபில் 12 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பாபர் ஆஸம் – கேப்டன் ரிஸ்வான் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தது. பாபர் 37 ரன், கம்ரான் குலாம் 5, சல்மான் ஆஹா 12 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ரிஸ்வான் 44, ஷாகீன் அப்ரிடி 24, இர்பான் கான் 22 ரன்னில் வெளியேறினர். ஹரிஸ் ராவுப் டக் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நசீம் ஷா 40 ரன் (39 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் ஸ்டார்க் வசம் பிடிபட்டார்.

பாகிஸ்தான் 46.4 ஓவரில் 203 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முகமது ஹஸ்னைன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டார்க் 3, கம்மின்ஸ், ஸம்பா தலா 2, அப்பாட், மார்னஸ் லபுஷேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 33.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து வென்றது. ஜோஷ் இங்லிஸ் 49, ஸ்டீவ் ஸ்மித் 44, ஜேக் பிரேசர், லபுஷேன் தலா 16 ரன், அப்பாட் 13, ஆரோன் ஹார்டி 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கம்மின்ஸ் 32 ரன் (31 பந்து, 4 பவுண்டரி), மிட்செல் ஸ்டார்க் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 3, ஷாகீன் ஷா 2, நசீம் ஷா, ஹஸ்னைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி அடிலெய்டில் நவ.8ம் தேதி நடக்கிறது.

The post பாகிஸ்தானுடன் முதல் ஒருநாள்; 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article