
லாகூர்,
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், மூழ்கி வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பாகிஸ்தான் 1 பில்லியல் அமெரிக்க டாலர்கள் கடன் கேட்டிருந்தது. இந்த கடன் வழங்குவது தொடர்பாக மதிப்பாய்வு, வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. ஐ.எம்.எப். வழங்கும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துவதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
ஆனால், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க ஐ.எம்.எப். ஒப்புதல் அளித்துள்ளது. அதேவேளை, 1 பில்லியன் டாலர்கள் கடன் உதவி வழங்க அனுமதி அளித்துள்ள ஐ.எம்.எப். அமைப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.