பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

2 months ago 14

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தங் மாவட்டத்தில் இன்று காலை 8.35 மணிக்கு பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், ரீமோட் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர். இந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை வாகனம் மற்றும் சில ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article