
பெங்களூரு,
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா பஜகோலி கிராமத்தை சேர்ந்தவர் சுஷாந்த். நேற்று முன்தினம் இவரது வாட்ஸ்-அப்புக்கு மர்மநபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் எப்படி இருக்கீர்கள்? என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாட்ஸ்-அப் எண் பாகிஸ்தானை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மர்மநபர்கள் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் குறுஞ்செய்தியை அனுப்பி இருப்பது தெரியவந்தது. மேலும் இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம்.
மேலும் உங்கள் கட்டிடத்துக்கு ஆபத்து, உங்கள் பகுதியில் குண்டு வெடிக்கும் என்றால் அதை நம்ப வேண்டாம். அவை அனைத்தும் வதந்தியே என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த குறுஞ்செய்தி விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.