
ஸ்ரீநகர்,
பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இந்த தாக்குதலானது உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் நடத்தது.
இந்த டிரோன்களை அழிக்க ராணுவம் பல வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.