பா.ம.கவில் மூத்தவர்களை தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?.. அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி..

3 months ago 11
பா.ம.க.விற்காக அன்றுதொட்டு இன்றுவரை உழைத்து வரும் G.K.மணி, AK மூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் இருந்தும் அன்புமணி ராமதாஸ் தலைவரானது எப்படி? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். துரைமுருகனை ஏன் துணை முதலமைச்சராக்கவில்லை என அன்புமணி கேட்டிருந்த நிலையில் சிவசங்கர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பா.ம.க.விற்காக உழைத்து ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவைக் கூட இறுதி காலத்தில் கைவிட்டவர்களுக்கு வன்னியர் பாசம் பற்றி எல்லாம் பேச தகுதி உண்டா? என்றும் வினவியுள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பையே எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ள பாஜகவை ஆதரித்து கூட்டணியில் இருக்கும் அன்புமணி, தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பேசி வருவது அரசியல் ஆதாயத்திற்காகவே என்றும் சிவசங்கர் விமர்சித்துள்ளார். 
Read Entire Article