லால்குடி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகே மாணவர்கள் விடுதியும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். வார்டனாக கும்பகோணம், அய்யாவாடியை சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன் (48) வார்டனாக உள்ளார். இவரது நண்பர், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சுந்தர்ராஜன்(40), பாதிரியாருக்கான படிப்பை திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
விடுமுறை நாட்களில் விடுதிக்கு வந்த சுந்தர்ராஜன், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின்படி லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சுந்தர்ராஜன், அவருக்கு உடந்தையாக இருந்த வார்டன் குழந்தைநாதன் ஆகியோரை கைது செய்தனர்.
The post மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: விடுதி வார்டன் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.