பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷியா கண்டனம்

3 hours ago 2

வாஷிங்டன்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருவார்கள். இந்த நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

பஹல்காமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில்40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.பயங்கரவாதிகளைப் பார்த்ததும் சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளை சவாரிக்கு கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயங்கர என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டரும் அனுப்பிவைக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பஹல்காம் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் 28 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள கண்டன் அறிக்கையில்,

இது 'எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம்.'இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை.'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷியா தொடர்ந்து வழங்கும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான இந்தியா முயற்சிகளில் அதன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ' குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்' இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு உண்மையான அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக புதின் கூறியுள்ளார்.

 அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஜே.டி.வான்ஸ் நேற்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article