பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரனிடம் அரசு சிறப்பு பிரதிநிதி நலம் விசாரிப்பு

1 day ago 3

சென்னை: பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பரமேஸ்வரனிடம் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரூரை சேர்ந்த டாக்டர் பரமேஸ்வரனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மேலும், பரமேஸ்வரனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இச்சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பரமேஸ்வரனின் சிகிச்சை மற்றும் இதர விஷயங்களுக்கான அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என உறுதி அளித்ததை பரமேஸ்வரனிடம் தெரிவித்து அவருக்கு ஊக்கமளித்தார். இந்த நிகழ்வின்போது பரமேஸ்வரனின் தந்தை ஆறுமுகம், அவரது தாயார் சித்ரா, மனைவி நயன்தாரா, தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரனிடம் அரசு சிறப்பு பிரதிநிதி நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article