திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்ததாக கிறிஸ்தவர்கள் அதிகம் வந்து செல்லும் ஆலயமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா மே6ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் கடந்த 6ம் தேதி குடந்தை ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறு சப்பர பவணியும், சிறப்பு திருப்பலியும் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நாளான நாளை தேர்பவணி நடைபெற உள்ளது. சிறப்பு திருப்பலியை குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் செபாஸ்டின், கொர்னேலியுஸ், ஆன்மீகத் தந்தையர்கள் ஜோசப், அருளானந்தம் மேற்கொள்ள உள்ளனர். திருப்பலி முடிந்ததும் மல்லிகை மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் பூண்டி மாதா எழுந்தருள தேர்பவணி நடைபெற உள்ளது. 15ம் தேதி காலை திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்று, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகின்றது.
துணிப்பை வழங்கும் எந்திரத்தில் துணி இருப்பு எண்ணிக்கையை சரிபார்க்கவும், துணிப்பையை பெற்று கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடை பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்து 40 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்தது.
The post திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி பேராலயத்தில் நாளை தேர்பவனி: 15ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு appeared first on Dinakaran.