பஹல்காம் தாக்குதல்: தாயையும் மகனையும் காப்பாற்றிய உள்ளூர் இஸ்லாமியர்கள்

4 hours ago 2

புதுடெல்லி,

காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளின் உயிரை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்டின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலை விசாரிக்கும் உள்ளூர் போலீசாருக்கு உதவுவதற்காக ஐ.ஜி. தலைமையிலான என்.ஐ.ஏ. (தேசிய புலானாய்வு அமைப்பு) குழு பஹல்காமுக்கு சென்றுள்ளது.

இந்தநிலையில், பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதல் எழுப்பிய அதிர்வலைகள் நாடு முழுவதும் இன்னமும் ஓயவில்லை. 26 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்ற ஒற்றை புள்ளியில் மத்திய அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளது.

இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பல்லவி என்பவர் கூறுகையில்,

"என் கணவரை கொன்றவர்களிடமிருந்து நாங்கள் தப்பியபோது, 'பிஸ்மில்லா பிஸ்மில்லா' என சத்தமாக கூறியபடி வந்த மூன்று உள்ளூர் (இஸ்லாமியர்கள்) இளைஞர்கள்தான் எங்களை காப்பாற்றினர் என் சகோதரர்கள் என்றே அவர்களை சொல்வேன். அவர்கள்தான் என்னையும் என் மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஒருவர் என் மகனை அரவணைத்து ஆறுதல் சொல்ல, மற்றவர்கள் என்னை தேற்றினர். அவர்களுக்கும் எங்கள் ஓட்டுநர் அப்ரீஸூக்கும் நன்றி என பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பல்லவி கூறியுள்ளார்.

Read Entire Article