
புனே,
'பிடே' பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தது. வெள்ளைநிற காய்களுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, 84-வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை (பல்கேரியா) தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.
ஒரு தோல்வியும் சந்திக்காத ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான கோனெரு ஹம்பி 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். சீனாவின் . ஜினெர் 2-வது இடத்தை பெற்றார். இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தார்.தமிழகத்தின் வைஷாலி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.