ஐபிஎல்: மும்பை வீரர் பும்ரா புதிய சாதனை

2 weeks ago 9

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது. 15.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 146 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது .இந்த போட்டியில் மும்பை அணி வீரர் பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினார் .

இந்த போட்டியில் ஒரு விக்கெட் எடுத்த மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் ஒட்டுமொத்த டி20 போட்டிகளின் விக்கெட் எண்ணிக்கை 300 ஆக (238 ஆட்டம்) உயர்ந்தது.

இந்த மைல்கல்லை எட்டிய 5-வது இந்தியர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். ஏற்கனவே இந்தியாவின் யுஸ்வேந்திர சாஹல், பியுஷ் சாவ்லா, புவனேஷ்வர்குமார், அஸ்வின் இந்த இலக்கை கடந்துள்ளனர்.

Read Entire Article