
சென்னை,
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் வங்கசேத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதில் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜனதா சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சரத் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.