
விழுப்புரம்,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விழுப்புரத்தில் நாளை (06.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
விழுப்புரம்: தாதம்பாளையம், சிறுவந்தாடு, உப்புமுத்தாம்பாளையம், மோட்சகுளம் மின்பாதையைச் சேர்ந்த அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், மோட்சகுளம், பக்கமேடு, எம்.ஜி.ஆர். நகர், காந்தி நகர், கள்ளிக்குளம், புத்து, அய்யனார் கோவில்.
திண்டுக்கல்: திரிபாதி நகர், என்.எஸ். நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி,தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.