மதுபோதையில் மாடியில் தூக்கம்: தவறி கீழே விழுந்த இளைஞர் பலி

3 hours ago 2

சென்னை,

சென்னை சூளைமேட்டில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வளைகாப்பு விழாவிற்காக, கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் பினேஷ் என்பவர் வந்திருந்தார். இவர், மது அருந்திவிட்டு வீட்டின் 2 வது மாடியில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மதுபோதையில் உருண்டு 2 வது மாடியில் இருந்து தவறி, கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சூழலில், சிகிச்சை பலன்றி பினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூளைமேடு போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். 

Read Entire Article