பஸ் மோதியதில் மூதாட்டி பலி

3 hours ago 1

பாலக்காடு, மார்ச் 11: கேரள மாநிலம் கோட்டயம் அருகே மூதாட்டி மீது தனியார் பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில் மூதாட்டி பலியானார். கோட்டயம் மாவட்டம் சிங்கவனத்தை அடுத்த குழிமற்றத்தை சேர்ந்த அன்னம்மா குரியாகோஸ் (75). இவர் சம்பவத்தன்று நெல்லிக்கல்லிருந்து தனியார் பஸ்சில் ஏறி சிங்கவனத்திலுள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பஸ்சில் இருந்து இறங்கி, தேவாலயத்திற்கு முன்பு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி மீது தனியார் பஸ் மோதி கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து, அவர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிங்கவனம் போலீசார் டிரைவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ் மோதியதில் மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Read Entire Article