பவுண்டரி சென்ற பந்தை தடுக்க முயன்ற டு பிளெஸ்சிஸ்.. பால் பாய் செய்த சம்பவம்.. இணையத்தில் வைரல்

7 months ago 21

அபுதாபி,

அபுதாபி டி10 (10 ஓவர்கள்) லீக் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பாப் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணி, ரோவ்மன் பவல் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி 10 ஓவர்களில் 112 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 113 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி புல்ஸ் 110 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் வீரர் டிம் டேவிட் அடித்த பந்தை பாப் டு பிளெஸ்சிஸ் பவுண்டரி செல்ல விடாமல் தடுக்க முயன்றார். இருப்பினும் பந்து பவுண்டரி சென்றது.

பந்தை துரத்தி வந்த அவர், வேகமாக வந்ததால் பவுண்டரி லைனை தாண்டினார். அந்த சமயத்தில் பவுண்டரி சென்ற பந்தை பால் பாய் குனிந்து எடுத்தார். இருவரும் ஒருவரையொருவர் சரியாக கவனிக்காத நிலையில், தன் மீது மோதிய டு பிளெஸ்சிசை பால் பாய் தூக்கி வீசினார். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ball Boy is taking Wrestling 's Coaching alsoFaf Duplessis pic.twitter.com/rMFreH4UGw

— Rohit Baliyan (@rohit_balyan) November 28, 2024
Read Entire Article